Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுமியை சீரழித்த தந்தை: மீண்டும் பொள்ளாச்சியில் அரங்கேறிய அவலம்

Advertiesment
சிறுமியை சீரழித்த தந்தை: மீண்டும் பொள்ளாச்சியில் அரங்கேறிய அவலம்
, புதன், 10 ஏப்ரல் 2019 (12:41 IST)
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. எப்படியேனும், ஒரு நாளுக்கு ஒரு பாலியல் செய்தியை கேட்டுவிடுகிறோம், அந்த அளவிற்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. 
வெளியிடத்தில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என நினைத்தால், சொந்த வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. ஆம், பொள்ளாச்சி அருகே கொள்ளுபாளையம் பகுதியில் வளர்ப்பு தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அரசு பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமி, குறிப்பிட்ட நாளன்று மிகவும் சோர்வாக காணப்பட்டதால், ஆசிரியை சிறுமியுடம் இது குறித்து வினவியுள்ளார். அப்போது அந்த சிறுமி நடந்ததை கூற அதிர்ச்சி அடைந்தார் அந்த ஆசிரியை. 
webdunia
பின்னர் பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக கோவை குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு புகார் அளித்தனர். மேலும் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். 
 
பின்னர் போலீஸார் சிறுமியிடம் இதனை பர்றி விசாரித்து விட்டு, சிறுமியின் வளப்பு தந்தையை கைது செய்தனர். ஏற்கனவே பொள்ளாச்சியில் மிக கொடூரமான பாலியல் பலாத்கார சம்பவம் அரங்கேரியுள்ள நிலையில் இது போன்ற மேலும் பல செய்திகள் அதிர்ச்சியை தருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சின்னம் ஒட்டும் பணி தொடக்கம் – கலைகட்டும் தேர்தல் களம் !