Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’பொள்ளாச்சி பாலியல் விவகாரம் - நக்கீரன் கோபாலிடம் 4 மணிநேரம் விசாரணை

Advertiesment
’பொள்ளாச்சி பாலியல்  விவகாரம் - நக்கீரன் கோபாலிடம் 4 மணிநேரம் விசாரணை
, திங்கள், 1 ஏப்ரல் 2019 (20:00 IST)
சமீபத்தில் பொள்ளாச்சியில் நடைபெற்ற இளம் பெண்கள் மீதான் பாலியல் வன்கொடுமை விவகாரம்  தொடர்பாக திருநாவுக்கரசு,சபரீஸ் செந்தில், உள்ளிட்டோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த செய்தியை தனது  நக்கீரன் ஊடகத்தில் செய்தியாக வெளிட்டது தொடர்பாக நக்கீரன் பத்திரிக்கை மற்றும் ஊடகத்தின் ஆசிரியர் நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பினர்.ஏற்கனவே 2 முறை நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பட்ட நிலையில் 3 ஆம் முறையாக சம்மன் அனுப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இன்று நக்கீரன் கோபாலிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். 
 
இதுபற்றி நக்கீரன் கோபால் கூறியதாவது:
 
பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது யார் என என்னிடம் கேட்கிறார்கள், இதைக் கண்டுபிடிக்கவேண்டியது காவல்துறையின் வேலையாகும். வீடியோவை எனக்கு யார் கொடுத்தார்கள் என திரும்ப, திரும்ப கேட்கிறார்கள்.
 
விசாரணை என்ற பெயரில் என்னை குற்றவாளி போல சிபிசிஐடி நடத்தினார்கள்.சில கேள்விகளுக்கு பதில் சொல்லாததால் சிபிசிஐடி போலீஸாரும் மிரட்டினார்கள். என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் நான் யூடூப்பில் பேசிய போதுநான் 1500 வீடியோ இருப்பதாக கூறியிருந்தததால் அதைக் காட்டச் சொல்கிறார்கள்.
 
உணர்வு உள்ள யாரும் பொள்ளாச்சி சமபவத்தை கண்டு கோபப்படாமல் இருக்க மாட்டார்கள். இதையெல்லாம் வெளியே கொண்டுவர நீ யார் என்று கேட்பதுபோல விசாரணை இருந்தது.
webdunia
பொள்ளாச்சி விவகாரத்தை வெளியே கொண்டு வந்தது நக்கீரன் இதழ்தான். என்று தெரிவித்தார்.
 
பொள்ளாச்சி சம்பவத்தில் ஜெயராமன் குறித்து அவதூறு கருத்து வெளிட்டதாகவும் குற்றசாட்டு எழுந்தது.
 
இந்நிலையில் இன்று சிபிசிஐடி எஸ்.பி நிஷா பார்த்திபன் விசாரணை நடத்தினார். ஏற்கனவேஏற்கனவே 2 முறை நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பட்ட நிலையில் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று ஆஜரானார் நக்கீரன் கோபால். இதில் 4 மணிநேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெலிவரி பாய் பாலியல் அத்துமீறல்: கூப்பன் கொடுத்து சரிகட்டிய ஸ்விக்கி