இன்னும் 8 நாட்களில் வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னம் ஒட்டும் பணித் தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. முதல்கட்டமாக நாளை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. அதையடுத்து ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. வாக்குப்பதிவுக்கான வேலைகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
கடந்த மாதமே வாக்குப்பதிவு எந்திரங்கள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டன. அதையடுத்து இப்போது வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் அவர்களுக்கான சின்னங்கள் ஒட்டும் பணி தொடங்கியுள்ளது. சென்னை ஆலந்தூரில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தில் இந்த பணிகள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகின்றன.
சின்னம் ஒட்டும் பணிகள் நிறைவடைந்ததும் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அவை அனுப்பிவைக்கப்படும்.