Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

Advertiesment
ஜெயக்குமார்

Mahendran

, செவ்வாய், 15 ஜூலை 2025 (12:17 IST)
உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் 45 நாட்களில் தீர்வு காணப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இது குறித்து கருத்து கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதிலாக பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
 
கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போதே இதேபோல் தான் மாவட்டம் தோறும் பெட்டிகளை வைத்து மனுக்களை பெற்றார்கள். ஆனால், அந்த மனுக்கள் எல்லாம் என்ன ஆனது என்றே தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 
 
"45 நாட்களில் மனுக்கள் தீர்வு செய்யப்படும் என்று முதலமைச்சர் கூறுகிறார். ஆனால், மனுக்கள் பெற்ற 30 நாட்களுக்குள் தீர்வு செய்ய வேண்டும் என்று அரசாங்க ஆணை இருக்கிறது. இவர்கள் எதற்காக 45 நாட்கள் என்று சொல்கிறார்கள்" என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
 
மொத்தத்தில், "உங்களுடன் ஸ்டாலின் என்று சொல்வதற்கு பதிலாக பொய்களுடன் ஸ்டாலின் என்றுதான் சொல்ல வேண்டும்" என்றும், "இதுவரை வாங்கிய மனுக்களுக்கு எத்தனை தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை சொல்வதற்கு துப்பு இல்லை" என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரயில்வே கேட்டை மூட மறந்த கேட்கீப்பர்.. ரயில் டிரைவரே இறங்கி வந்து கேட்டை மூடிய விவகாரத்தால் பரபரப்பு..!