Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும்: வாக்களித்த பின் ஸ்டாலின் பேட்டி

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (08:32 IST)
மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும்
தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு காலை 7 மணி அளவில் நடைபெற்று வருகிறது என்பதும் அரசியல்வாதிகள் திரையுலக பிரபலங்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் மிகுந்த ஆர்வத்துடன் காலை 7 மணிமுதல் வாக்களித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது மனைவி மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலின் உடன் வந்து வாக்களித்தார். அவர் வாக்களித்துவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ’இது ஆளுங்கட்சிக்கு எதிரான தேர்தல் என்றும் மே இரண்டாம் தேதி மக்களின் தீர்ப்பு சிறப்பாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் தனக்கு வந்த தகவலின் படி அனைத்து தொகுதிகளிலும் அதிக அளவு வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும் இந்த தேர்தல் ஒரு மாற்றத்திற்கான தேர்தல் என்றும் அவர் தெரிவித்தார் 
 
முன்னதாக முக ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் அண்ணா மற்றும் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்துடன் வாக்களிக்க வந்த போது அவருக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறையினர் செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 வயதுக்கு உட்பட்டவர்கள் யூடியூப் பயன்படுத்த தடை.. உலகில் முதல்முறையாக நிறைவேற்றப்படும் மசோதா..!

இந்தியாவுக்கு 25% வரி என டிரம்ப் மிரட்டல் எதிரொலி.. படுவேகமாக சரியும் பங்குச்சந்தை..!

கையெழுத்து சரியில்லை என 3ஆம் வகுப்பு மாணவருக்கு சூடு வைத்த ஆசிரியை.. அதிர்ச்சி சம்பவம்..!

புறாக்கள் கால்களில் பச்சை, சிகப்பு விளக்குகள்.. ட்ரோன்கள் என வதந்தி பரப்பிய இருவர் கைது..!

400 கிலோ கஞ்சா கடத்திய இளம்பெண்.. ஐதராபாத் விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments