Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

18 தொகுதி இடைத்தேர்தல் – தொண்டர்கள் ,நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் நன்றி !

18 தொகுதி இடைத்தேர்தல் – தொண்டர்கள் ,நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் நன்றி !
, வியாழன், 25 ஏப்ரல் 2019 (13:46 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தலோடு 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. அதில் சிறப்பாக செயலாற்றிய கட்சி நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளில் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தலோடு சேர்த்து வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதையடுத்து மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டபிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வரும் மே 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பொறுப்பாளர்களும் நேற்று அறிவிக்கப்பட்டன. இந்த 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை மே 1 முதல் ஸ்டாலின் தொடங்க இருக்கிறார்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கும் 18 தொகுதி இடைத்தேர்தலுக்கும் சேர்த்து பணியாற்றிய திமுக உறுப்பினர்கள், நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகள்,   மற்றும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஆகிய அனைவரும் திமுகவின் வெற்றிக்காக சிறப்பாக செயலாற்றியதாகவும் அவர்களுக்கு இதயமார்ந்த நன்றியைக் கூறிக் கொள்வதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அயராத உழைப்பிற்கும், மக்கள் தந்த ஆதரவிற்கும் முழுமையான வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை திடமாக உள்ளது. மக்களின் தீர்ப்பு நன்றாக அமையும் நாளாக மே 23 விடியும் என்று கூறியுள்ள அவர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராட்சத மாமிச கிரைண்டருக்குள் விழுந்து உயிரிழந்த பெண்