Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 9 April 2025
webdunia

குடும்ப தலைவிகளுக்கான பயன் தரும் வீட்டு குறிப்புகள்...!

Advertiesment
Home tips
சப்பாத்தி மாவு எப்படி பிசைந்தாலும், மிருதுவாக வரவில்லை என்ற குறையை நீக்க, மாவில் சிறிதளவு பால் ஊற்றிப் பிசைந்துகொள்ள வேண்டும். பாலாடைக் கட்டி போட்டு பிசைந்தாலும் நல்லது. வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து மாவுடன் கலந்து பிசைந்தாலும்  சப்பாத்தி மென்மையாக வரும்.
* உப்பு ஜாடியில் சிறிதளவு சோள மாவு அல்லது அரிசி போட்டு வைத்தால், உப்பு நீர்த்துப் போகாமல் இருக்கும்.
 
* பச்சை காய்கறிகளை பேப்பரில் சுற்றி, பிரிட்ஜில் வைத்தால் ‘பிரெஷ்’ஆக இருக்கும்.
 
* பாலோ, பன்னீரோ, எது போட்டாலும், கூடவே வெந்நீர் ஊற்றினால் மேலும் மென்மையாக இருக்கும். வெந்தயக்கீரை சப்பாத்தி செய்யும்போது  கூடவே, சிறிதளவு கடலை மாவு, தயிர் ஊற்றிப்  பிசைந்தால் சுவை கூடும்.
 
* பூரி செய்யும்போது சில நேரங்களில், விரிந்து வராமல் போகும். மாவில் சிறிது பால் சேர்த்துப் பிசைந்தால், பூரி நன்கு விரிந்து கொடுக்கும்.  சூடான எண்ணெயை மாவில் ஊற்றிப் பிசைந்தாலும் பூரி நன்றாக பூரித்து வரும்.
 
* மஸ்லின் துணியில் சிறிய அளவில் பைகள் தைத்து வைத்துக் கொண்டால், கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றைப் போட்டு பிரிட்ஜில்  வைக்கலாம்; இலைகள் நிறம் மாறாமல் இருக்கும்.
 
* பிளாஸ்டிக் கவரில் ஒரே ஒரு துளை இட்டு, பச்சை மிளகாய்களைப் போட்டு பிரிட்ஜில் வைத்தால், மிளகாய், மாதக் கணக்கில் கெடாமல்  இருக்கும்.
 
* மிளகாய் பொடியில் வண்டு வராமல் இருக்க, சிறு துணியில் சிறிது பெருங்காயத் துண்டை வைத்து மூட்டையாகக் கட்டிப்போட்டு வைத்தால்  போதும்.
 
* பிரிட்ஜில் வைக்கப்படும் பிரெட் துண்டுகள், விரைப்பாகி விடுவதைத் தவிர்க்க, அவற்றுடன் உருளைக் கிழங்கைப் போட்டு வைப்பது நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!!