Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

18 லட்சம் மதிப்புள்ள ஹேண்ட்பேக்! பாலிவுட் வாரிசு நடிகையின் அலப்பறை!

Advertiesment
18 லட்சம் மதிப்புள்ள ஹேண்ட்பேக்!  பாலிவுட் வாரிசு நடிகையின் அலப்பறை!
, வியாழன், 25 ஏப்ரல் 2019 (13:28 IST)
பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் சினிமாவில் அறிமுகமான சில நாட்களிலேயே பெரும் பிரபலமானார். அந்த அளவிற்கு அவர் நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது. சினிமாவில் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதே டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ஆனந்த் அஹுஜா என்பவரை கடந்த ஆண்டு மே மதம் திருமணம் செய்துகொண்டார்.  அவ்வப்போது சோனம் தனது கணவருடன் சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.


 
இந்நிலையில் தற்போது, மும்பை விமான நிலையத்திற்கு வந்த சோனம் கபூரின் கையில் இருந்த ஹேண்ட் பேக் தான் தற்போது  பாலிவுட் மீடியாவில் பெரும் பேச்சாக பேசப்பட்டு வருகிறது.  

webdunia

 
மும்பை விமான நிலையத்திற்கு கோட், சூட், கூலிங் கிளாஸ் அணிந்து வந்த  அவர் கையில் ஒரு ஹேண்ட்பேக் இருந்தது. (Hermes Birkin) பிராண்டை சேர்ந்த அந்த ஹேண்ட் பேக்கை கூகுளில் சர்ச் செய்து பார்த்தபோது தான் தெரிந்தது அதன்  விலை ரூ. 18 லட்சம் என்று சோனம் கபூரின் இந்த ஹேண்ட்பேக்கின் விலையை அறிந்த நெட்டிசன்கள் அடப்பாவமே, அந்த பணம் இருந்தால் நான் லைஃபில் செட்டில் ஆகிவிடுவேன் என்று கூறி புலம்பி வருகிறார்கள். ஆனால் பாலிவுட்டில் இதெல்லாம் சகஜம். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் காத்துள்ளேன் - விஜய் சேதுபதி