Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 1 April 2025
webdunia

தமிழக மீனவர்கள் 11 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

Advertiesment
Sri Lanka Navy
, புதன், 21 டிசம்பர் 2022 (17:06 IST)
கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக  நாகை மீனவர்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நாகையில் இருந்து சுமார் 40 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்து 4 நாட்களுக்கு முன்பு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

இந்த  நிலையில், எல்லை தாண்டி கடலில் மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் 11 நாகை மீனவர்களை இன்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பருத்தித்துறை துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும், 11 தமிழக மீனவர்களையும்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவில் காய்ச்சல் தடுப்பு மருத்துகளுக்கு கட்டுப்பாடு!