Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்பை பேனா மூலம் குளிக்கும் பெண்ணை வீடியோ எடுத்த மருத்துவ மாணவர்: போலீசார் விசாரணை..!

Advertiesment
ஸ்பை பேனா மூலம் குளிக்கும் பெண்ணை வீடியோ எடுத்த மருத்துவ மாணவர்: போலீசார் விசாரணை..!

Siva

, புதன், 31 ஜனவரி 2024 (08:12 IST)
இளம்பெண் குளிக்கும் போது ஸ்பை பேனா மூலம் வீடியோ எடுத்ததாக மருத்துவ மாணவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை ராயபுரம் என்ற பகுதியில் முதுநிலை பல் மருத்துவ மாணவர் இப்ராஹிம் என்பவர் தனது வீட்டில் குடியிருக்கும் பெண் குளிக்கும் போது  வீடியோ எடுப்பதற்காக குளியல் அறையில் ஸ்பை பேனா என்ற உளவுக்கருவி செட்டப் செய்து வைத்ததாக தெரிகிறது

இந்த மூலம் பதிவாகும் குளியல் அறை புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவர் எடுத்திருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் குளியல் அறைகள் சந்தேகத்திற்கு இடமாக ஸ்பை பேனா இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண் அந்த பேனாவை எடுத்து தனது கணவரிடம் காண்பித்தபோது அது உளவுக்கருவி என்பது தெரிய வந்தது.

உடனே இதுகுறித்து அந்த பெண் தன் கணவருடன் சென்று அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்தனர். இதனை அடுத்து முதுநிலை பல் மருத்துவ மாணவர் இப்ராஹிம் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மம்தாவை கன்னத்தில் அறையுங்கள் .. மேற்குவங்க பாஜக தலைவர் பேச்சால் பரபரப்பு..!