Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாலு பேருக்கு மத்தியில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்! – வாலிபர்களை வலைவீசி தேடும் போலீஸ்!

abuse

Prasanth Karthick

, வெள்ளி, 19 ஜனவரி 2024 (09:22 IST)
பெங்களூரில் உணவு வாங்க வந்த பெண்ணிடம் பலர் முன்னிலையில் இளைஞர் ஒருவர் பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



நாடு முழுவதும் ஆங்காங்கே பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் குறித்த செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆளரவமற்ற நேரங்களில், இடங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு பாலியல் தொல்லைகள் நடப்பது அதிகமாக உள்ளது. ஆனால் சமீப காலங்களில் ஆள்நடமாட்டம் உள்ள சமயங்களில் கூட பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளது.

பெங்களூரில் விஜயநகர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பெண் ஒருவர் உணவு வாங்க வந்துள்ளார். உணவு ஆர்டர் செய்துவிட்டு தனது தோழியுடன் பேசியபடி நின்றுள்ளார். அப்போது அங்கு தனது நண்பர்களுடன் வந்த இளைஞர் ஒருவர் திடீரென பெண்ணின் அருகே சென்று அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீற தொடங்கியுள்ளார்.


இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கத்தியதுடன், அந்த இளைஞரை திட்டவும் தொடங்கியுள்ளார். அப்பகுதியில் இருந்தவர்கள் என்ன என்று அவதானிப்பதற்கு இளைஞர் தனது நண்பர்களுடன் எஸ்கேப் ஆகி விட்டார்.

இதுகுறித்து விஜயநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு தப்பி ஓடிய இளைஞர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓட்டல் அறையில் திடீரென புகுந்த சிறுத்தை.. சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி..!