Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடர் விடுமுறை எதிரொலி.! குமரி, கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்..

train

Senthil Velan

, சனி, 27 ஜனவரி 2024 (12:52 IST)
தொடர் விடுமுறை நாளையுடன் முடிவதையடுத்து, கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  
 
தைப்பூசம், குடியரசு தினம் என தமிழ்நாட்டில் தொடர் விடுமுறை விடப்பட்டதால், சென்னையில் இருந்து ஏராளமானோர், சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். அவர்கள் சென்னை திரும்பும் வகையில் கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு நாளை சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஞாயிற்றுக்கிழமை கோவையிலிருந்து இரவு 11.30 க்கு ரயில் புறப்பட்டு,  ஜனவரி 29 ஆம் தேதி நள்ளிரவு 12:10 க்கு திருப்பூரைச் சேருகிறது. அங்கிருந்து நள்ளிரவு 1 மணி அளவில் ஈரோடு வருகிறது.  2 மணிக்கு சேலம், 3: 55 மணிக்கு ஜோலார்பேட்டை, காலை 5 மணிக்கு காட்பாடி, 6:43 க்கு அரக்கோணம், 7:38 மணிக்கு பெரம்பூர் மற்றும் காலை 8:30க்கு சென்னை ரயில் நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
29ஆம் தேதி மதியம் 1:45க்கு சென்னையில் இருந்து மீண்டும் புறப்பட்டு பெரம்பூர் அரக்கோணம் காட்பாடி ஜோலார்பேட்டை சேலம் ஈரோடு திருப்பூர் வந்து இரவு 11: 05 மணிக்கு கோவை வந்து சேர்கிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது .

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டம் - ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களிடம் பேரம்.! கெஜ்ரிவால் பரபரப்பு புகார்.!!