அயோத்தியில் நாளை ராமர் கோயில் திறக்கப்பட உள்ளதை அடுத்து நாளை மறுநாள் முதல் பொதுமக்களுக்கு ராமரை தரிசிக்க அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அயோத்திக்கு செல்லும் பக்தர்களின் வசதியை கணக்கில் கொண்டு நாடு முழுவதிலும் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்களை இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இருந்து 34 சிறப்பு ரயில்கள் தினமும் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் இருந்து அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்களை இயக்கப்படும். இந்த பயணத்துக்கு குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்யும் சிறப்பு ரயில்கள், ஜன. 29-ம் தேதி முதல் பிப்.29-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளன. இதுகுறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.