Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவர்கள் போல் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் சிறப்பு துணை தேர்வுகள்: அமைச்சர் தகவல்..!

Mahendran
திங்கள், 9 ஜூன் 2025 (17:20 IST)
பாலிடெக்னிக் கல்லூரிகளில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியருக்காக ஜூன் / ஜூலை 2025-ல் சிறப்பு துணைத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.செழியன் அறிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
 
“தமிழ்நாடு அரசு மாணவர்களின் கல்வி வளர்ச்சியை முக்கியமாக கருதி பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களின் மேன்மை நோக்கில் ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
 
ஏப்ரல் 2025-ல் நடைபெற்ற தேர்வுகளில் சில பாடங்களில் தோல்வியடைந்த பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, அவர்களது உயர்கல்வி அல்லது வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படாமல் இருக்க, முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சிறப்பு துணைத் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.
 
தேர்வுக்கான அறிவிப்புகள் மற்றும் முழுமையான விவரங்கள் https://dte.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
 
விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
 
விண்ணப்ப தொடங்கும் நாள்: 18.06.2025
 
விண்ணப்ப இறுதி நாள்: 23.06.2025 (இரவு 11.59 மணி வரை)
 
நுழைவுச் சீட்டு பதிவேற்றம்: 25.06.2025
 
கருத்தியல் தேர்வுகள்: 30.06.2025 – 16.07.2025
 
செய்முறைத் தேர்வுகள்: 17.07.2025 – 25.07.2025
 
முடிவுகள் வெளியீடு: 30.07.2025
 
கட்டண விவரங்கள்:
 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.30
 
ஒரு பாட தேர்வுக்கான கட்டணம்: ரூ.65
 
மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை சீர்மிகச் செய்ய வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 12 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு முக்கியத்துவம், கல்விக்கு பாராமுகமா? நயினார் நாகேந்திரன்

உக்ரைன் ரஷ்யாவை தாக்கிய ஏவுகணைகளை வாங்க விரும்பும் பாகிஸ்தான்.. ஆனால் அதில் தான் ஒரு சிக்கல்..!

அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் உண்டு.. அமைச்சரின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments