10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான துணைத்தேர்வுகள் எழுதிய மாணவர்கள் மற்றும் மறுகூட்டல், மறுமதிப்பீடு ஆகியவற்றுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், மதிப்பெண் மாற்றம் உள்ள தனித்தேர்வர்கள் ஆகியோர்களின் மறுமதிப்பீட்டு பட்டியல் நாளை வெளியாக உள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட விவரங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: \
நடைபெற்று முடிந்த ஜூன் / ஜூலை 2024, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) / மேல்நிலை முதலாம் ஆண்டு(+1) / பத்தாம் வகுப்பு (SSLC) துணைத்தேர்வுகள் எழுதி, மறுகூட்டல் (Re-total) மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள (Revaluation) தனித்தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் (Notification பகுதியில்) 30.08.2024 (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மறுகூட்டல் / மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தனித்தேர்வர்கள் மட்டும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியல் (Statement of Marks) / தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Certificate) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், மேல்நிலை இரண்டாம் ஆண்டு / பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்து கொள்ளப்படுகிறது.