கல்வி நிதி தர மறுக்கும் வழக்கு: தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்ற உத்தரவு..!

Mahendran
திங்கள், 9 ஜூன் 2025 (17:18 IST)
தமிழக அரசு தாக்கல் செய்த கல்வி நிதி தொடர்பான மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டு அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
 
மத்திய அரசிடம் இருந்து பெறவேண்டிய கல்வித் தொகையை தொடர்ந்து தாமதப்படுத்தி வருவதாக தமிழக முதல்வரும், பல்வேறு அமைச்சர்களும் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.
 
மத்திய அரசு சார்பில் அமைச்சர் தர்மேந்திர பிரதான், “புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை நிதி வழங்கப்படாது” எனத் தெளிவாக கூறியுள்ளார். இதனையடுத்து, தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தை நாடியுள்ளது.
 
சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் ரூ.2,151.59 கோடியும், அதற்கான 6% வட்டி ரூ.139.70 கோடியும், மொத்தமாக ரூ.2,291 கோடி வழங்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு கடந்த மாதம் மனு தாக்கல் செய்தது.
 
இந்த நிதி நிறைவேற்றப்படாமலே தாமதிக்கப்படுவதால், மாநிலம் முழுவதும் சுமார் 43 லட்சம் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளதால், இந்த வழக்கு விரைவில் விசாரிக்கப்பட வேண்டும் என திமுகவின் வழக்கறிஞர் பி. வில்சன் வலியுறுத்தினார்.
 
ஆனால் நீதிபதிகள் பி. கே. மிஸ்ரா மற்றும் மன்மோகன் தலைமையிலான அமர்வு, இது அவசர வழக்காக கருதப்பட முடியாது என்றும், விரைந்து விசாரணை மேற்கொள்ள தேவையில்லை என்றும் கூறி மனுவை நிராகரித்தது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு உளவு பார்த்த வழக்கறிஞர்: 41 லட்சம் ரூபாய் கைமாறியது அம்பலம்!

சன்னி லியோன் போஸ்டரை வயலில் ஒட்டிய விவசாயி! 'தீய சக்திகள்' நெருங்காமல் இருக்க என விளக்கம்..!

"துரியோதனன் தவறான அணியில் சேர்ந்தது" போன்றது: செங்கோட்டையன் குறித்து நயினார் நாகேந்திரன்..!

நாடாளுமன்றத்திற்கு நாயுடன் வந்த காங்கிரஸ் எம்பி.. கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் 'பவ் பவ்' என கிண்டல்!

பிரதமர் மோடி டீ விற்பது போன்ற AI கேலி வீடியோ.. காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கடும் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments