இதுவரை, கணிதம், இயற்பியல், வேதியல் படித்தவர்கள் மட்டுமே டிப்ளமோ படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேரலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது, இனி காமர்ஸ் மாணவர்களும் நேரடியாக டிப்ளமோ படிக்கலாம் என்றும், இரண்டாம் ஆண்டில் சேரலாம் என்றும் கூறப்பட்டிருப்பது, மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிளஸ் டூ பொதுத்தேர்வில், வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இந்த கல்வியாண்டு முதல் அதாவது 2025–2026 ஆம் கல்வியாண்டு முதல் பாலிடெக்னிக்கில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர முடியும் என, தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு வரை, கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவு மாணவர்கள் மட்டுமே பாலிடெக்னிக்கில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர வேண்டும் என்ற விதி இருந்தது. அந்த விதி தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் இரண்டாம் ஆண்டில் பாலிடெக்னிக்கில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்காக, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்கத்திற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.