திருச்செந்தூரில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி சூரசம்ஹார விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய முக்கிய நகரங்களிலிருந்து திருச்செந்தூருக்கு வரும் அக்டோபர் 26-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சூரசம்ஹாரம் முடிந்த பிறகு, திருச்செந்தூரில் இருந்து மீண்டும் மேற்கண்ட ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
இந்தப் பேருந்துகளுக்கான பயணச்சீட்டுகளைத் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்றும், நாளையும் (அக். 24 மற்றும் 25) திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு போன்ற இடங்களுக்கு 120 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.