தனிப்பட்ட முறையில் ஆளுநர் பற்றி கண்டிப்பாக பேச கூடாது என சிறப்பு கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு பேச்சு.
நீட் தேர்வு விலக்கு மசோதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய நிலையில் அந்த மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பினார். இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற குறிப்புடன் அவர் திருப்பி அனுப்பிய நிலையில் கவர்னரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் இன்று மீண்டும் நீட் விலக்கு மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.
இன்று காலை 10 மணிக்கு கூடிய சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரின் கடிதத்தின் தமிழாக்கத்தை முழுமையாக சபாநாயகர் அப்பாவு வாசித்தார். பின்னர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக அல்ல.
மேலும், தனிப்பட்ட முறையில் ஆளுநர் பற்றி கண்டிப்பாக பேச கூடாது எனவும் அதை நான் அனுமதிக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார். சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டது உகந்ததா என சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும் எனவும் கூறினார்.