நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.ரவி திருப்பி அனுப்பியதற்கு கவிஞர் வைரமுத்து இது குறித்து தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இது தமிழகத்தில் கடும் சர்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் திமுக எம்.பிக்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
இதனிடையே கவிஞர் வைரமுத்து இது குறித்து தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது, திருப்பி அனுப்புவது ராஜ்பவனின் மேட்டிமை மீண்டும் அனுப்புவது சட்டமன்றத்தின் உரிமை.
நாளை முதலமைச்சர் கூட்டும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தின் முடிவை ராஜ்பவனும் ஜனாதிபதி மாளிகையும் மட்டுமல்ல இருள்கட்டிக் கிடக்கும் ஏழைக் குடிகளின் ஓலைக் குடிசைகளும் கண்ணில் நீரோடு கவனிக்கின்றன என குறிப்பிட்டிருக்கிறார்.