Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்கள் பிரச்சினைய பேசுங்க.. மத்தவங்கள விமர்சித்து பேச வேண்டாம்! - தொண்டர்களுக்கு விஜய் உத்தரவு!

Advertiesment
மக்கள் பிரச்சினைய பேசுங்க.. மத்தவங்கள விமர்சித்து பேச வேண்டாம்! - தொண்டர்களுக்கு விஜய் உத்தரவு!

Prasanth Karthick

, செவ்வாய், 7 ஜனவரி 2025 (11:32 IST)

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது தொண்டர்கள் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசுமாறு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நிலையில் கட்சி உறுப்பினர் சேர்க்கை, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளல் ஆகியவற்றிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் கட்சி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கட்சி நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

அதன்படி, நிர்வாகிகள் தங்கள் மாவட்டங்களில் தாங்களும், தங்களுக்கு கீழ் செயல்படுபவர்களும் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளிலும் கட்சியின் வளர்ச்சி குறித்தும், தங்கள் தொகுதி வளர்ச்சி குறித்தும், தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து, தவெகவின் கொள்கைகள் குறித்தும் அவசியம் பேச வேண்டும் என கூறப்பட்டுள்ளதாம்.

 

மேலும் எக்காரணத்தை கொண்டு அரசியல் பேசுகிறோம் என்ற எண்ணத்தில் மேடையிலும், பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் மற்றவர்களை சுட்டிக்காட்டி அரசியல் பேசுவதையோ, தாக்குவதை போல பேசுவதையே தவிர்க்க வேண்டும் என்றும், கட்சி தோழர்கள் எந்த மேடையில் பேசினாலும் அது மக்கள் பிரச்சினைகள் குறித்ததாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கும்பமேளா ஸ்பெஷல்: நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்