Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கும்பமேளா ஸ்பெஷல்: நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

கும்பமேளா ஸ்பெஷல்: நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

Siva

, செவ்வாய், 7 ஜனவரி 2025 (10:46 IST)
கும்பமேளா திருவிழாவை ஒட்டி நெல்லையிலிருந்து காசிக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியில் ஜனவரி 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கும்பமேளா நடைபெற உள்ளது. இந்த விழாவின்போது காசியில் உள்ள கங்கை நதியில் புனித நீராட லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதும், அன்றைய தினத்தில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்றும் நம்பிக்கை உள்ளது.

இந்த நிலையில், காசிக்கு செல்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நெல்லையிலிருந்து காசிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், தென்காசி, ராஜபாளையம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக காசிக்கு சுற்றுலா செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையிலிருந்து பிப்ரவரி 5ஆம் தேதி இந்த ரயில் அதிகாலை ஒரு மணிக்கு புறப்பட்டு, மதுரையிலிருந்து அதே நாள் காலை ஆறு மணிக்கு கிளம்பும். பிப்ரவரி 7ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு காசிக்கு சென்றடையும். அன்று மாலை கங்கா ஆர்த்தி பார்த்து, மறுநாள் முழுவதும் சுற்றுலா தளங்களுக்கு சென்று, அதன் பின்னர் ஒன்பதாம் தேதி காசி விசுவநாதர் ஆலயம், விசாலாட்சி ஆலயம் ஆகிய கோயில்களுக்கு செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

10ஆம் தேதி அயோத்தி சரயு நதி மற்றும் ராமஜென்ம பூமி கோவிலில் வழிபாடு செய்து, அன்றைய தினம் இரவு இந்த சிறப்பு ரயில் புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயிலில் பயணம் செய்ய, ஒரு நபருக்கு 26,850 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேற்றைய சரிவுக்கு பின் இன்று சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!