கோவையில் தேர்தலை நேர்மையாக நடத்தக்கோரி தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாளை தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் மற்றும் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவைந்துள்ளது.
இந்நிலையில் கோவையில் பல இடங்களில் திமுகவினர் ஓட்டு பணம் விநியோகிப்பதாக குற்றம் சாட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த துணை ராணுவத்தை கொண்டு வரவேண்டும் என கூறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்.
தொடர்ந்து மூன்று மணி நேரமாகபோராட்டம் நடந்த நிலையில் போலீஸாரின் பேச்சுவார்த்தைக்கும் ஒத்துழைக்காததால் எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்.எல்.ஏக்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.