Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன? செளமியா அன்புமணி ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Advertiesment
தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன? செளமியா அன்புமணி ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Mahendran

, செவ்வாய், 9 ஜூலை 2024 (14:14 IST)
நடைபெற்ற முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளராக களம் கண்ட சௌமியா அன்புமணி தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் தற்போது அவர் தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்துள்ளார்.
 
அப்போது அவர் நிர்வாகிகளிடம் பேசியபோது சில நிர்வாகிகள் கூறிய தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். குறிப்பாக ஒரு முக்கிய நிர்வாகி ’மக்களுக்கும் பாமக தலைமைக்கும் உள்ள இடைவெளி பெரிதாக உள்ளது என்றும் தேர்தல் நேரத்தில் மட்டுமே தலைமையை சந்திக்க முடிகிறது என்றும் மற்ற நேரத்தில் தலைமையை சந்திக்க முடியவில்லை என்றும் இதனால் தான் இந்த மோசமான தோல்வி என்றும் கூறியிருக்கிறார்.
 
மேலும் மக்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்தாவிட்டால் இன்னும் மோசமான இடத்திற்கு பாமக தள்ளப்படும் என்று சில நிர்வாகிகள் காட்டமாகவே பேசி உள்ளார். அனைத்தையும் குறித்துக் கொண்ட சௌமியா அன்புமணி இது குறித்து தலைமையிடம் பேசுகிறேன் என்று உறுதி அளித்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
 
இதனை அடுத்து சௌமியா அன்புமணி சில முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

108 MP கேமரா.. 5ஜி ஸ்பீட்..! இந்தியாவில் அறிமுகமானது Redmi 13 5G! – சிறப்பம்சங்கள், விலை நிலவரம்!