இந்தியாவில் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றான ஷாவ்மி தனது புதிய Redmi 13 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
									
										
								
																	
	
இந்தியாவில் பட்ஜெட் விலையில் பல சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது ஷாவ்மி நிறுவனம். தற்போது மீண்டும் பட்ஜெட் விலையில் பல சிறப்பம்சங்களை கொண்ட புதிய Redmi 13 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளனர்.
 
									
										
			        							
								
																	Redmi 13 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
	
		- 
			6.79 இன்ச் FHD+ எல்சிடி டிஸ்ப்ளே
 
		- 
			ஸ்னாப்ட்ராகன் 4 Gen 2 ஆக்டாகோர் ப்ராசஸர்
 
		- 
			ஆண்ட்ராய்டு 14 வித் Hyper OS
 
		- 
			6 ஜிபி / 8 ஜிபி RAM
 
		- 
			128 GB இண்டர்னல் மெமரி + 1 TB சப்போர்ட் செய்யும் மெமரி கார்ட் ஸ்லாட்
 
		- 
			108 MP + 2 MP டூவல் ப்ரைமரி கேமரா
 
		- 
			13 MP முன்பக்க செல்பி கேமரா
 
		- 
			சைட் பிங்கர் ப்ரிண்ட் சென்சார், டூவல் சிம், வைஃபை, ப்ளூடூத்,
 
		- 
			3.5 mm ஆடியோ ஜாக், லவுட் ஸ்பீக்கர்ஸ்
 
		- 
			5030 mAh பேட்டரி, 33 W ஃபாஸ்ட் சார்ஜிங்
 
	
	
	இந்த Redmi 13 5G ஸ்மார்ட்போன் ப்ளாக் டைமண்ட், ஹவாயன் ப்ளூ மற்றும் மூன்ஸ்டோன் சில்வர் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் 6 GB + 128 GB மாடல் விலை ரூ.13,999 ஆகவும், 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ.15,499 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  
									
											
							                     
							
							
			        							
								
																	ஜூலை 12 முதல் அமேசான் தளத்தில் ஷாவ்மி தளத்தில் இந்த Redmi 13 5G ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.