தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 4வது வழித்தடம் அமைக்க ரயில்வே பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் சென்னையும், அதை சுற்றியுள்ள தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளும் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில் பணிகளுக்காக மக்கள் பலரும் மின்சார ரயில்களை நம்பியே உள்ளனர். தற்போது சென்னை - தாம்பரம் மிகவும் பிஸியான ரயில் பாதையாக மாறிவிட்ட நிலையில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 4வது புதிய இருப்புப்பாதையை அமைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இதற்காக ரூ.713.4 கோடியில் 4வது ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகளை தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. வழித்தடம் அமைப்பதற்கான இறுதி இட ஆய்வுகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
இந்த நான்காவது ரயில் வழித்தடம் அமைந்தால், கூடுதல் மின்சார ரயில்களை இயக்க முடியும். இது பயணிகளுக்கு உதவியாக அமையும். மேலும் வெளியூர்களில் இருந்து வரும் விரைவு ரயில்கள் செங்கல்பட்டு தாண்டியதும் குறைவான வேகத்தில் பயணிக்க வேண்டிய பிரச்சினைகளும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K