Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செங்கோட்டை- மயிலாடுதுறை உள்பட 9 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: தென்னக ரயில்வே

Siva
வியாழன், 9 ஜனவரி 2025 (08:28 IST)
செங்கோட்டை - மானாமதுரை உள்பட ஒன்பது ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மதுரை அருகே உள்ள கூடல் நகர் ரயில் பாதையில் மேம்பாட்டு பணி நடைபெறுவதன் காரணமாக, 9 ரயில்கள் இன்று முதல் மாற்று பாதையில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.35 மணி வரை மேம்பாட்டு பணி நடைபெறுவதால், இந்த நேரத்தில் கூடல் நகர் வழியாக செல்லும் ஒன்பது ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

அதன்படி, செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில், நாகர்கோவில் -  மும்பை ரயில், மதுரை -  பிஹானிர் ரயில், நாகர்கோவில் -  கோவை ரயில், குருவாயூர்-  எழும்பூர் ரயில், கோவை -  நாகர்கோவில் ரயில்,  ஓகா - ராமேஸ்வரம் ரயில், மயிலாடுதுறை -  செங்கோட்டை ரயில், திருவனந்தபுரம்- திருச்சி இன்டர்சிட்டி ரயில் ஆகியவை மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒன்பது ரயில்களும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.. முதல்வர் தொடங்கி வைக்கிறார்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது. தொடரும் சிங்கள படையின் அட்டகாசம்.

திருப்பதி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு.. தேவஸ்தானம் மீது முதல்வர் அதிருப்தி..!

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments