பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ள நிலையில் அந்த ரயில்கள் குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்
1. பெங்களூரு - சென்னை சிறப்பு ரயில் ஜனவரி 10 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.40 க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும். அன்றைய தினம் சென்னையில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 10.50-க்கு பெங்களூருவை சென்றடையும். .
2. பெங்களூரு - தூத்துக்குடி சிறப்பு ரயில் ஜனவரி 10 ஆம் தேதி சிறப்பு ரயில் பெங்களூருவில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் ஜனவரி 11ஆம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். மறுமார்க்கமாக சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு ஜனவரி 12 ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு மைசூரு வரை செல்லும்.
3. எர்ணாகுளம் - சென்னை ஜனவரி 16 ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து மாலை 6.15 -க்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 8.30 க்கு சென்னையை அடையும். மறுமார்க்கமாக ஜனவரி 17ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
4. திருவனந்தபுரம் - சென்னை சிறப்பு ரயில் ஜனவரி 15 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து காலை 4.25 -க்கு புறப்பட்டு அன்று இரவு 11 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும். மறுமார்க்கமாக ஜனவரி 16 நள்ளிரவு 1 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ) இரவு 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும் .