சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வெளியேற்றுள்ள முக்கிய தகவல் குறித்து தற்போது பார்ப்போம்.
தெலுங்கானா மாநிலம் மௌலா அலியில் (செகந்திராபாத்) இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு டிச. 11, 14, 18, 21, 25, 28 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக கொல்லத்திலிருந்து டிச. 13, 16, 20, 23, 27, 30 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
இந்த ரயில்களில் 8 ஏசி வகுப்பு பெட்டிகள், 9 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 3 இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் ஒரு பொதுப் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் குண்டூா், ஓங்கோல், நெல்லூா், கூடூா், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், செங்கனூா் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும்.
அதேபோல் நான்டேட் - கொல்லம் இடையேயான சபரிமலை சிறப்பு ரயில் தொடா்ந்து ஜன. 3, 10 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். மறுமாா்க்கமாக, ஜன. 5, 12 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
மேலும் கொச்சுவேலி - ஷாலிமா், திருநெல்வேலி - ஷாலிமா், தாம்பரம் - சந்திரகாச்சி மற்றும் போத்தனூா் - பரௌனி இடையேயான விரைவு ரயில் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் ஜனவரி மாதம் இறுதி வரை சபரிமலை வரை நீட்டிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.