Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எழும்பூரிலிருந்து செந்தூர், பல்லவன், குருவாயூர் ரயில்கள் பகுதியாக ரத்து..! - தெற்கு ரயில்வே அறிவிப்பின் முழுவிவரம்!

Advertiesment
south railway

Prasanth Karthick

, வெள்ளி, 7 மார்ச் 2025 (09:58 IST)

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை எழும்பூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

இதுகுறித்து தெற்கு ரயில்வே  வெளியிட்டுள்ள அறிவிப்பில் “திருச்செந்தூரில் இருந்து நாளை இரவு 8.35க்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் விரைவு ரயில் (20606) தாம்பரம் வரை மட்டுமே செல்லும். தாம்பரம் - எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

 

திருவண்ணாமலையில் இருந்து 9ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் பயணிகள் ரயில், தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே பகுதியாக ரத்து

 

9ம் தேதி திருநெல்வேலியில் இருந்து எழும்பூர் வரும் வந்தே பாரத் (20666) மாம்பலம் - எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யபடுகிறது. அதே நாளில் மதுரையில் இருந்து காலை 6.45க்கு புறப்பட்டு எழும்பூர் வரும் வைகை எக்ஸ்பிரஸ் (12636) தாம்பரம் - எழும்பூர் இடையே பகுதியாக ரத்து

 

மார்ச் 9ம் தேதி எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில்கள்:

 

எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127) - தாம்பரத்தில் இருந்து காலை 10.50க்கு புறப்படும்

எழும்பூர் - காரைக்குடி எக்ஸ்பிரஸ் (12605) - தாம்பரத்தில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும்

எழும்பூர் - செந்தூர் ரயில் (20605) - தாம்பரத்தில் இருந்து மாலை 4.27 மணிக்கு புறப்படும்

 

மார்ச் 9ம் தேதி எழும்பூரில் இருந்து காலதாமதமாக செல்லும் ரயில்கள்:

 

எழும்பூர் - தேஜஸ் விரைவு (22671) காலை 6.30 மணிக்கு புறப்படும்

எழும்பூர் - மண்டபம் விரைவு ரயில் (22661) காலை 6.15 மணிக்கு புறப்படும்.

 

ஏற்கனவே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ள வந்தேபாரத், சார்மினார், பல்லவன், வைகை விரைவு ரயில்களின் பகுதி நேர ரத்து 9ம் தேதி வரை தொடரும்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டாம பாத்துக்கோங்க! - மத்திய அரசுக்கு இலங்கை வேண்டுகோள்!