புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தில் மார்ச் மாதம் முதல் ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெற்கு ரயில்வே பொது மேலாளர் இந்த தகவலை தெரிவித்தார்.
ஏற்கனவே, இந்த ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று கூறப்பட்ட நிலையில், அதற்கான தேதி மார்ச் மாதம் என முடிவு செய்யப்பட்டுள்ளதும், ஆனால் சரியான தேதி பற்றிய விவரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
ரூ.550 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்து, சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடைபெற்றது. ஏற்கனவே, ஜனவரி மாதத்தில் இந்த பாலத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், சில காரணங்களால் அது ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மார்ச் மாதம் பாம்பன் பாலம் திறக்கப்படும் என்றும், பிரதமர் மோடி அதை திறந்து வைக்க இருக்கிறார் என்றும் ரயில்வே பொது மேலாளர் ஆர்என் சிங் அவர்கள் தெரிவித்ததையடுத்து, ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.