ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும் என்ற நிலையில் இந்த ஆண்டு அசானி புயல் காரணமாக அந்தமான் நிகோபார் தீவுகளில் முன்னதாகவே தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது தெற்கு அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென்மேற்கு அரபிக்கடலில் சில பகுதிகள், மாலத்தீவு, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருவதால் தென்மேற்கு பருவமழை நெருங்கி உள்ளதாகவும் அதனால் அங்கு பருவமழை ஆரம்பித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது
இதனால் இன்னும் ஒரு சில நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்னேறி வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது