Publish Date: Sat, 28 May 2022 (07:15 IST)
Updated Date: Sat, 28 May 2022 (06:36 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்தால் பெட்ரோல் டீசல் விலை கணிசமாக குறைந்தது. அதேபோல் மாநில அரசும் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.