அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பின் மீது குற்றம்சாட்டியவரின் மகன் தற்கொலை செய்து கொண்டார்.
வரும் 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. எனவே குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு 20 மளிகைபொருட்கள் அடங்கிய தொகுப்பினை அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட்ட புளியில் பல்லி இருப்பதாகக் கூறிய முதியவர் நந்தன் மீது அரசு அவதூறு வழக்குப் பதிவு செய்திருந்தது.
இதனால் மன உளைச்சலில் இருந்த அவரின் மகன் குப்புசாமி நேற்று தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்றார். அவரை அருகில் உள்ளோர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.