Publish Date: Wed, 12 Jan 2022 (18:36 IST)
Updated Date: Wed, 12 Jan 2022 (18:36 IST)
அடுத்த ஆண்டு முதல் பொங்கல் பரிசு தொகுப்பில் மண் பானையும் இணைக்கப்படும் என புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைப் போலவே புதுவையிலும் பொங்கல் பரிசு தொகுப்புகள் அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன என்பதும் இந்த ஆண்டும் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் மண்பானையையும் சேர்த்துக் கொடுக்கவேண்டும் என புதுவை மாநில ஆளுனர் தமிழிசை அவர்களிடம் மண்பானை தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர்
இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அடுத்த ஆண்டு முதல் பொங்கல் பரிசு தொகுப்பு மண்பானையும் சேர்த்து கொடுக்க வழிவகை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்