Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் பார்க்க தந்தையை கொன்ற மகன்

Advertiesment
ஐபிஎல் பார்க்க தந்தையை கொன்ற மகன்
, வியாழன், 12 ஏப்ரல் 2018 (16:55 IST)
அரக்கோணத்தில் ஐபிஎல் போட்டி பார்க்க ரிமோட் தராத தந்தையை மகன் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
அரக்கோணம் பகுதியை சேர்ந்த அண்ணாமலை நேற்றிரவு தனது வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார். அவரது மகன் நந்தகுமார்(35) வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். மகன், தந்தையிடம் ஐபிஎல் போட்டி பார்க்க வேண்டும் சேனலை மாற்றவும் அல்லது ரிமோட்டையும் தரும்படி கேட்டுள்ளார்.
 
அண்ணாமலை, நாடகம் முடியட்டும் தந்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார். நந்தகுமார் சேனலை மாற்றும்படி சத்தம் போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நந்தகுமார் கட்டையை எடுத்து தந்தையின் பின் பக்க தலையில் தாக்கியுள்ளார்.
 
அண்ணாமலை வலி தாங்க முடியாமல் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி, வீட்டு வாசலில் மயங்கி விழுந்துள்ளார். சத்தம் கேட்ட ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நந்தகுமார் தலைமறைவாகி விட்டார். தலைமறைவான நந்தகுமார் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டுவிட்டரில் உலக அளவில் டிரெண்ட் ஆன 'GO BACK MODI' ஹேஷ்டாக்