Publish Date: Wed, 11 Apr 2018 (19:57 IST)
Updated Date: Wed, 11 Apr 2018 (20:02 IST)
ஐபிஎல் 2018 தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் விளையாடுகிறது.
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய ஆட்டம் ராஜஸ்தான் - டெல்லி ஆகிய அணிகள் இடையே நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. அதன்படி டெல்லி அணி களமிறங்க உள்ளது.
இந்த போட்டி இரு அணிகளுக்கு இந்த தொடரின் இரண்டாவது போட்டி. இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த போட்டியில் இரு அணிகளும் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்ய போராட உள்ளனர்.