Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

IPL 2018: CSK vs KKR வெற்றி யாருக்கு?

Advertiesment
IPL 2018: CSK vs KKR வெற்றி யாருக்கு?
, செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (15:30 IST)
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதவுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை தனது சொந்த மண்ணில் விளையாடவுள்ளது. 
 
இரண்டு அணிகளுமே ஏற்கனவே இந்த சீசனில் ஒரு போட்டியில் விளையாடி வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி மும்மைக்கு எதிராவும், கொல்கத்தா அணி பெங்களூருக்கு எதிராகவும் வெற்றி கண்டது. 
 
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டிவைன் பிராவோ மட்டுமே பேட்டிங்கில் பார்மில் இருந்தார். பவுலிங்கில் தீபக் சாஹர், ஷேன் வாட்சன், பிராவோ தவிர மற்றவர்கள் சரியாக வீசவில்லை.
 
மாறாக தன்னம்பிக்கையின் உச்சத்தில் தினேஷ் கார்த்திக் தலைமை கொல்கத்தா அணி களமிறங்குகிறது. ஆனால், சென்னையில் ஆடிய போட்டிகளில் சிஎஸ்கே பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளது. 
webdunia
ஸ்பின் பந்து வீச்சில் சுனில் நரைன், தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, ராணா ஆகியோர் சிறந்து விளங்குகிறார்கள். குறிப்பாக தினேஷ் கார்த்திக்கை ஸ்பின்னில் வீழ்த்துவது கடினமானது.
 
கேதார் ஜாதவ் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து காயம் காரணமாக விலகியதையடுத்து சென்னை மிடில் ஆர்டரில் பேட்டிங்கிள் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
 
முரளி விஜய், ஷேன் வாட்சன் தொடக்கத்தில் களமிறங்க கேதார் ஜாதவ் இடத்தில் ராயுடு களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது. ஆனால், எப்படி இருந்தாலும், சிஎஸ்கே வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காமன்வெல்த் போட்டிகள்: தங்கப் பதக்கம் வென்றார் ஹீனா சித்து