Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் கட்சியில் இந்த பிரபலங்கள் இணைகிறார்களா? பரபரப்பு தகவல்..!

Advertiesment
விஜய் கட்சியில் இந்த பிரபலங்கள் இணைகிறார்களா? பரபரப்பு தகவல்..!

Mahendran

, திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (15:26 IST)
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய் கட்சியில் சில அரசியல் பிரபலங்கள் இணைய இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்யின் தமிழக வெற்றி கழகம் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் நிலையில் இந்த கட்சியின் முதல் மாநாடு விரைவில் நடைபெற உள்ளது. இந்த முதல் மாநாட்டில் பிற கட்சியில் உள்ள சில அரசியல் கட்சி தலைவர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஏசி சண்முகம், தடா பெரியசாமி, பண்ருட்டி ராமச்சந்திரன், பழ கருப்பையா, தமிழருவி மணியன் ஆகியோர் விஜய் கட்சியில் இணைய இருப்பதாகவும் விஜய் கட்சியின் முதல் மாநாட்டில் இவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டும் இன்றி இரண்டு திராவிட கட்சியில் இருக்கும் சில தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர்களிடமும் விஜய் கட்சியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் எல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது விஜய் கட்சியின் முதல் மாநாட்டின் போது தான் தெரியவரும்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியை வைத்து திமுக சீனியர்களை அவமதிக்கிறார் முதல்வர்: கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு..!