முன்னாள் தமிழக முதல்வரின் மகன் விஜய்யின் அரசியல் கட்சியில் சேர இருப்பதாக கூறப்படுவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை சமீபத்தில் தொடங்கிய விஜய் கடந்த சில நாட்களுக்கு முன் தனது கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்தார் என்பதும் இது குறித்த பரபரப்பான செய்திகள் வெளியானது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் இந்த மாநாட்டில் சில அரசியல் பிரபலங்கள் கட்சியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், விஜய் கட்சியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் கட்சியில் ரவீந்திரநாத் இணைவதற்கு அவரது தந்தை ஓபிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இனியும் அதிமுகவையும் அப்பாவையும் நம்பி பிரயோஜனம் இல்லை, விஜய் கட்சியில் தான் தனது அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்று தனது நட்பு வட்டாரத்தில் கூறியிருப்பதாக தெரிகிறது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.