தனுஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். ஆனால் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் முதலில் ரிலீஸ் ஆனது. சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படத்தில் இவர்தான் நாயகி என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
									
						                     
							
							
			        							
								
																	இந்த நிலையில் மேகா ஆகாஷ் மற்றும் சாய் விஷ்ணு என்பவருகும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது குறித்த புகைப்படங்களை மேகா ஆகாஷ் அல்லது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய வைரல் ஆனது. அதன் பின்னர் வருங்கால மணமக்கள் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் மணமகன் சாய் விஷ்ணு, ரஜினிகாந்தின் காலா மற்றும் கபாலி ஆகிய படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவராம். ஆனால் இப்போது சினிமாவில் இருந்து விலகி சுயமாக தொழில் செய்து வருகிறாராம். இதையெல்லாவற்றையும் விட முக்கியமானது அவர் காங்கிரஸ் கட்சி பிரமுகர் திருநாவுக்கரசரின் மகன் என்பதுதான்.