தமிழகத்தில் உள்ள ஒரு லட்சம் மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற கணினி மென்பொருள் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
பயிற்சி விவரங்கள்: தேசிய திறன் அகாடமி (National Skill Academy) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட கணினி மென்பொருள் தொடர்பான திறன் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
படிப்புகள்: விண்ணப்பதாரர்கள் மென்பொருள் பொறியியல் டிப்ளமோ, மென்பொருள் பொறியியல் முதுகலை டிப்ளமோ மற்றும் 100-க்கும் அதிகமான புதிய ஏஐ மற்றும் கணினி மென்பொருள் சான்றிதழ் படிப்புகளில் இருந்து தங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்கலாம்.
கல்வித் தகுதி: 10+2 தேர்ச்சி பெற்றவர்கள், பொறியியல், இளங்கலை, முதுகலை, எம்பிஏ பட்டதாரிகள் மற்றும் பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்த மாணவர்கள், அத்துடன் வேலையில்லாத இளைஞர்கள் அனைவரும் இந்தப் பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தப் படிப்புகளை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தகுதியுள்ள அனைவரும் www.nationalskillacademy.in என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தித் தங்களுடைய விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.
மேலதிகத் தகவல்களுக்கு: 9505800050 என்ற அலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.