மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பொதுக்கூட்டத்தில் பாஜகவினர் செருப்பு வீசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இந்து தீவிரவாதம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் மீண்டும் திருப்பரங்குன்றம் தோப்பூரில் பிரசாரத்தை தொடங்கிய கமல்ஹாசன், தீவிர அரசியலில் இறங்கிய நாங்கள், தீவிரமாகத்தான் பேசுவோம். யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசுவதில்லை. ஆனால் சரித்திர உண்மையை பேசினால் கசக்கத்தான் செய்யும் என்றும் கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதை தொடர்ந்து பிரச்சாரத்தை ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் தங்கி இருந்த விடுதிக்கு சென்று சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. ஆலோசனையை முடித்துவிட்டு மீண்டும் மேல அனுப்பானடியில் பிரச்சாரத்தை துவங்கினார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கமல்ஹாசன் மேடைக்கு சென்ற போது, அவரை நோக்கி சொருப்பு வீடப்பட்டது. பாஜக்வை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இதை செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், வீசப்பட்ட செருப்பு கமல் மீது படவில்லை என்றும், மேடை மீதுதான் வந்து விழுந்தது என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.