Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தை திடீரென ரத்து செய்த கமல்ஹாசன்: காரணம் என்ன?

திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தை திடீரென ரத்து செய்த கமல்ஹாசன்: காரணம் என்ன?
, புதன், 15 மே 2019 (19:59 IST)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இந்து தீவிரவாதம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கடந்த இரண்டு நாட்களின் தேர்தல் பிரச்சாரத்தை கமல்ஹாசன் ரத்து செய்தார்.
 
இந்த நிலையில் இன்று மாலை மீண்டும் திருப்பரங்குன்றம் தொகுதியில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். அப்போதும் தான் இந்து தீவிரவாதம் குறித்து பேசியதில் இருந்து பின்வாங்க போவதில்லை என்றும் உண்மை கசக்கத்தான் செய்யும் என்றும் கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார். 
 
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட சாமநத்தம், பனையூர் மற்றும் வில்லாபுரம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்துவிட்டு பின்னர் ஒரு பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்ள கமல் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் திடீரென தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு தனது நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் நாளை, நாளள மறுநாள் திட்டமிட்டிருந்த பிரச்சாரமும் ரத்து செய்யப்பட்ட வாய்ப்பு இருப்பதாக அவரது கட்சியின் தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பக்கோடா விற்பனை செய்த கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீஸ்!