Publish Date: Fri, 18 Jun 2021 (13:53 IST)
Updated Date: Fri, 18 Jun 2021 (13:56 IST)
பாலியல் குற்றச்சாட்டுகள் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து நேற்று டெல்லியில் அவர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டர்.
நேற்று சென்னை கொண்டு வரப்பட்ட சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இதனையடுத்து பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அவர் சிறையில் சற்றுமுன் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது சிறையில் இருந்த சிவசங்கர் பாபாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் உடனடியாக அவர் செங்கல்பட்டிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.