Publish Date: Fri, 18 Jun 2021 (11:17 IST)
Updated Date: Fri, 18 Jun 2021 (11:19 IST)
யூட்யூபில் ஆபாசமாக பேசி பணம் சம்பாதித்த பப்ஜி மதனை போலீஸார் தேடி வந்த நிலையில் தருமபுரியில் மதனை கைது செய்துள்ளனர்.
ஆன்லைன் விளையாட்டுகளை யூட்யூபில் ஒளிபரப்புவது மற்றும் யூட்யூப் சேனலில் பல வீடியோக்களை வெளியிடுவது என யூட்யூப் பிரபலமாக இருப்பவர் மதன். தனது யூட்யூப் சேனலிலும், ஆன்லைன் விளையாட்டின்போது மதன் தொடர்ந்து பெண்களை கொச்சையான வார்த்தைகளால் பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விசாரணைக்கு மதனை போலீசார் அழைத்த நிலையில் அவர் தலைமறைவானார். இதனால் அவரது மனைவி கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். இந்நிலையில் மதனின் சொகுசு கார் மற்றும் சொத்துக்களை முடக்கியதுடன், மதனை தேடும் பணியையும் போலீஸார் முடுக்கிவிட்டிருந்தனர்.இந்நிலையில் தருமபுரியில் தலைமறைவாக இருந்த மதனை போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரியில் வீடு ஒன்றில் மதன் பதுங்கியிருப்பதை அறிந்து அங்கு ரகசியமாக சென்ற குற்றப்பிரிவு போலீஸார் மதனை வளைத்து பிடித்துள்ளனர். போலீஸை கண்டதும் அதிர்ச்சியடைந்த மதன், போலீசின் காலில் விழுந்து கதறியதாகவும், தான் செய்தது தப்புதான், தன் குற்றங்களை ஏற்கிறேன், மன்னித்து விடுங்கள் என கெஞ்சியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
அவரை கைது செய்துள்ள போலீஸார் அவரை சென்னை கொண்டு வருவதாகவும், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின் விசாரணைக்கு எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.