நாளை முதல் தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுநாள் வரை பயன்படுத்தப்பட்டு வந்த தேர்தல் வாக்காளர் பட்டியல் Freeze செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாளை முதல் நவம்பர் 3 வரை படிவங்கள் அச்சடிப்பது, அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படுகிறது.
நவம்பர் 4 முதல் வீடு வீடாக கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கி டிசம்பர் 4ம் தேதியன்று முடிவடையும். கணக்கெடுப்பில் ஆட்சேபணைகள் தெரிவிக்க, திருத்தங்கள் செய்ய டிசம்பர் 9 முதல் ஜனவரி 8 வரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த காலக்கட்டத்தில் பெறப்படும் புகார்களை டிசம்பர் 9 முதல் ஜனவரி 31 வரை சரிபார்த்து இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டு பிப்ரவரி 7 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு நடைபெறும் இடங்கள்: தமிழ்நாடு, மத்திய பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், குஜராத், கேரளா, மேற்கு வங்கம், அந்தமான், கோவா, உத்தரபிரதேசம், லட்சத்தீவு, சத்திஸ்கர்
Edit by Prasanth.K