நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான உத்தரவுகளுக்கும், வழிகாட்டுதல்களுக்கும் எந்த கோப்புகளும் இல்லை என்று இந்தியத் தேர்தல் ஆணையம் சமூக ஆர்வலர் பரத்வாஜின் ஆர்டிஐ கேள்விக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பதிலளித்துள்ளது.
நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ள எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது?" என்பதுதான் சமூக ஆர்வலர் பரத்வாஜ் தேர்தல் ஆணையத்திடம் எழுப்பிய கேள்வி. இதற்கு, தொடர் கோப்புகள் எதுவும் இல்லை என்று தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
"சுயாதீன மதிப்பீட்டின்" அடிப்படையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாகத் தேர்தல் ஆணையம் முன்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தாலும், அது குறித்த எந்த ஒரு பதிவும் இல்லை என்று தற்போது பதிலளித்துள்ளது.
மேலும், 2003-ஆம் ஆண்டு நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்களின் நகலை கேட்டு, 2025-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உத்தரவையும் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.