ஒரே காரில் பயணம் செய்த ஓபிஎஸ் - செங்கோட்டையன்.. அரசியல் பேசினார்களா?

Mahendran
வியாழன், 30 அக்டோபர் 2025 (11:05 IST)
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் ஆகிய இருவரும் இன்று பசும்பொன்னுக்கு ஒரே காரில் பயணித்தது, தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப்பார்க்கப்படுகிறது.
 
விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் இருக்கும் தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருவரும் மதுரையில் இருந்து ஒரே வாகனத்தில் சென்றனர்.
 
ஒரே காரில் இருவரும் இணைந்து பயணித்திருப்பது, அ.தி.மு.க.வில் ஒற்றுமைக்கான முயற்சிகள் நடைபெறுவதை குறிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 
 
அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில், இரு முக்கிய தலைவர்கள் தேவர் குருபூஜை நிகழ்வுக்காக இணைந்து பயணித்தது, கட்சியின் எதிர்கால ஒற்றுமைக்கான ஒரு திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சரிந்த தங்கம் விலை! மக்கள் மகிழ்ச்சி! - இன்றைய விலை நிலவரம்!

காரை உரசி சென்ற பைக்.. ஆத்திரத்தில் பைக் ஓட்டுனரை காரை ஏற்றி கொலை செய்த தம்பதி..!

ஆபாச பட விவகாரம்: காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏவின் உதவியாளர் கைது..!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள் ?

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை.. இன்று மீண்டும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments