Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏழைகள் சாமி கும்பிடக் கூடாதா..? எதற்கு இவ்வளவு கட்டணம்? - திருச்செந்தூர் கோவிலுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Advertiesment
Tiruchendur

Prasanth Karthick

, வெள்ளி, 25 அக்டோபர் 2024 (12:35 IST)

முருகனின் அறுபடை வீடுகளின் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 

 

முருகனின் அறுபடை வீடுகளில் புகழ்பெற்றதாக உள்ளது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த கோவிலில் தரிசனம் செய்ய நாள்தோறும் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் வருகின்றனர். முக்கியமாக திருச்செந்தூர் கோவிலில் நடக்கும் கந்த சஷ்டி விழாவின்போது ஏராளமான பக்தர்கள் வருகை தரும் நிலையில் அந்த சமயங்களில் மட்டும் தரிசனத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 

இதுதொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அதில் ஆதார் எண் அடிப்படையில் தரிசன நேரத்தை குறிப்பிட்டு இணைய வழி டோக்கன் அளிக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள் “தரிசனத்திற்கு ஆயிரம், இரண்டாயிரம் என வசூலித்தால் ஏழை மக்கள் எவ்வாறு சாமி தரிசனம் செய்வார்கள். ஏழைகள் சாமி கும்பிடக் கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோவிலா?” என காட்டமான கேள்விகளை எழுப்பினர்.

 

தரிசனத்திற்கு அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து விளக்கம் அளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரியங்கா காந்தி கணவரின் சொத்து மதிப்பு போலியானது: பாஜக குற்றச்சாட்டு..!